ஓவியப் பயிற்சி - இரண்டாம் நிலை - 12 வகுப்புகள் (3 மாதங்கள்)

ஐந்து வயதினருக்கு மேல் - ஓவிய வகுப்பு இரண்டாம் நிலை பாடத்திட்டம் ஆசிரியர் அருந்ததி ரத்தினராஜ்

Beginner 0(0 Ratings) 1 Students enrolled
Created by Arunthathi Ratnaraj Last updated Tue, 11-May-2021 English
நான் என்ன கற்றுக்கொள்வேன்?

0 Lessons 00:00:00 Hours
+
பொருளடக்கம்

கோடுகள் :


பல வகையான கோடுகளை அறிமுகப்படுத்துதல் (நேர்க்கோடு, முறிந்த கோடு, வளைந்த கோடு மற்றும் மேலும்...) ஒரு சில கோடுகளிலூடாக  ஒரு காட்சியை உருவாக்க தட்டையான வர்ண பாவனையாக இருக்கலாம். இலகுவான பொருட்கூட்டம் - வடிவம் :


கோடுகளின் முக்கியத்துவம் இலகுவான பொருட்கூட்டம் வரையும் போது கவனிக்க வேண்டிய சமச்சீர் . முன்னணி ,  பின்னணி, ஒளி, நிழல் , பற்றிய அறிமுகம்.


வர்ண பயன்பாடும் - வர்ண சேர்க்கையும்:புல் வர்ணங்கள்:   சிவப்பு,  மஞ்சள், நீலம் 

கலப்பு வர்ணங்கள் : பச்சை,  செம்மஞ்சள்,   ஊதா,  

அயல் வர்ணங்கள்  :- சிவப்பு - ஊதா, செம்மஞ்சள் 

மஞ்சள் - செம்மஞ்சள் , பச்சை

நீலம்     -  ஊதா, பச்சை

எதிர்வர்ணங்கள்:- (சிவப்பு- பச்சை) , (மஞ்சள் - ஊதா) (நீளம் -செம்மஞ்சள்) 

குளிர் வர்ணங்கள்: (நீலம், பச்சை ஊதா ), 

வெப்ப வர்ணங்கள்: (சிவப்பு மஞ்சள் செம்மஞ்சள்)

பொது வர்ணங்கள்: (கருப்பு வெள்ளை)


வர்ண சேர்க்கை  சூரிய அஸ்தமனம்:


வர்ண சேர்க்கை பற்றிய விளக்கத்தை இயற்கை தோற்ற ஓவியம் மூலம் கொடுக்கலாம். கடற்கரையில் சூரிய அஸ்தமனம் வரையும் பி[போது வானத்திலும் கடலிலும் வர்ணங்களை கலந்து எந்த விதமான வர்ணங்கள் தோன்றுகின்றன  என்று விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.


ஓவியத்தில் முப்பரிமாணம் - பழங்கூட்டம் 

முப்பரிமாணத்தை ஓவியத்தில் விளக்குவதற்கு ஒளி, நிழல் பற்றிய புரிதல் அவசியம், பழங்களின் கூட்டம் அவற்றின் முப்பரிமாண தன்மை, பழங்கள் ஒழுங்கு படுத்தி இருக்கும் துணியின் மடிப்பு சுருக்கங்களின் ஒளி நிழல் பற்றிய விளக்கம்.  


ஓவியத்தில் தூரத்தை கொண்டு வருதல் ( Perspective )

பாதையோர மரங்கள்:

கிட்ட உள்ள பொருட்களில் பெரியதாகவும் தூர உள்ள பொருள் சிறியதாகவும் தெரியும் என்ற அடிப்படை விளக்கத்தை ஓவியத்தில் கொண்டு வருதல் , மரங்கள் நிரையாக உள்ள ஓவியத்துடன் இதை விளக்கலாம்  


உருவ ஓவியம் ( Portrait )


கோடுகள் பற்றிய தெளிவும் அதனைக் கையாளும் நேர்த்தியும் மாணவர்களுக்கு வந்த நிலையில் சமச்சீராக முகம் வரைவதற்கான பயிற்சியை கொடுக்கலாம். ஒளி, நிழல் படுத்தலும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் 


இயற்கையில் கிடைக்கும் பொருட்களைப் பார்த்து வரைதல்  - 


பூங்கொத்து பார்த்து வரைவதிலிருக்கும் ஒத்திசைவுகளை கவனத்தில் எடுத்தல், இயற்கையில் காணப்படும் நிறங்களை கவனத்திலெடுத்து அதற்கேற்ப வர்ண தேர்வைப் பழகி கொள்ளல். 


மனித முழு உருவம் வரைதல் முழு மனித உருவம் வரைவதற்கான விதிமுறைகள் அளவு பரிமாணங்கள் என்பவற்றை அறிந்து கொள்ளல் .


இயற்கைக் காட்சி


 

இதுவரை கற்றுக்கொண்ட அடிப்படை ஓவிய விதி முறைகள் கையாண்டு இயற்கை காட்சி வரைதல்.


இலகுவான உருவத்தொகுப்புஒன்றுக்கு மேற்பட்ட உருவங்களை வைத்து ஓவியத்தை உருவாக்குதல் 


ஓவியத்தில் பாணி பற்றிய அறிமுகம்  (technique / Style )


வெவ்வேறு ஓவியங்களின் படைப்புகள் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு ஓவியரின் படைப்பை தெரிவு செய்து அதனை மீள் உருவாக்கல்.


+
தொடர்புடைய வகுப்புகள்
About the instructor
 • 0 Reviews
 • 14 Students
 • 2 படிப்புகள்
+

ஓவிய பயிற்சியில் முதுகலை பட்டம் பெற்று 20 வருடங்கள் மேலாக ஓவியப் பயிற்சி கொடுத்து வருகிறேன். சிறு வயதில் தொடங்கிய வரைவதற்கான ஆர்வம் இன்று ஓவியக் கலையயை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

மேலதிக தகவல்களுக்கு,

https://youtu.be/QJRsujkEY5s

நன்றி.

Student feedback
0
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
Reviews
£30 £50
Buy now
Includes:
 • 00:00:00 Hours On demand videos
 • 0 Lessons
 • Access on mobile and tv
 • Full lifetime access